மதுரையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. இன்று தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை?

2-வது கட்டமாக நாளை புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள்.
மதுரையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. இன்று தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை?
Published on

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக நாளை புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது.

மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள்.

இந்நிலையில் மதுரையில் இன்று இரவு அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயலுடன் அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனவும் தெரிய வந்துள்ளது. இன்றைய பேச்சின் தொடர்ச்சியாக நாளை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது.

தி.மு.க. அறிவிப்பதற்கு முன்பாக தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com