த.வெ.க. தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்

ஆதவ் அர்ஜுனா இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல்குமார் த.வெ.க.வில் இணைந்தார்.
த.வெ.க. தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்
Published on

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இதேபோல், அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல்குமார் த.வெ.க.வில் இணைந்தார்.

சென்னை பனையூர் அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. அப்போது, விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் இருவரும் த.வெ.க.வில் இணைந்தனர்.

இந்நிலையில், தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, அதிமுகவில் இருந்து வந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார், தவெகவின் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேச்சாளர் ராஜ்மோகன், த.வெ.கவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com