தமிழ்நாடு அரசியலின் நிரந்தர அடையாளம் பேரறிஞர் அண்ணா - ஆதவ் அர்ஜுனா

'மக்களிடம் செல், அவர்களிடம் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்..' என்று ஜனநாயகத்தின் அடிப்படையை சொல்லித்தந்த மாபெரும் தலைவர். அண்ணா வழியில் மீண்டுமொரு சாமானியர்களுக்கான ஆட்சியை, மக்கள் துணையோடு வென்றெடுப்போம்.
தமிழ்நாடு அரசியலின் நிரந்தர அடையாளம் பேரறிஞர் அண்ணா - ஆதவ் அர்ஜுனா
Published on

பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

'மக்களிடம் செல், அவர்களிடம் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்..' என்று ஜனநாயகத்தின் அடிப்படையை சொல்லித்தந்த மாபெரும் தலைவர். கொள்கை அரசியலையும் மக்களுக்கான நடைமுறை தீர்வுகளையும் கற்றுத் தேர்ந்து, 'இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சியும் மாநிலத்தின் ஆட்சியை அமைக்கலாம், ஒரு சாமானிய மனிதனும் அதிகாரத்தை அடையலாம்' என்ற ஜனநாயக புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர்.

தமிழ்நாட்டின் தலைமகன், மாநில சுயாட்சியின் உரிமை முழக்கம், மக்கள்நல அரசியலின் நாயகர், ஜனநாயக-தேர்தல் அரசியலின் வழிகாட்டி மற்றும் தமிழ்நாடு அரசியலின் நிரந்தர அடையாளம் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று, அவர் புகழைப் போற்றுவோம். அவர் வழியில் மீண்டுமொரு சாமானியர்களுக்கான ஆட்சியை, மக்கள் துணையோடு வென்றெடுப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com