சென்னை பங்களா வீட்டில் பயங்கர தீ விபத்து- தம்பதி உயிரிழப்பு

தீ விபத்தில் தம்பதி நடராஜன்- தங்கம் மற்றும் அவர்களது மகன் ஸ்ரீராம் ஆகியோர் சிக்கினர்.தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பங்களா வீட்டில் பயங்கர தீ விபத்து- தம்பதி உயிரிழப்பு
Published on

சென்னை வளசரவாக்கத்தில் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணவன்- மனைவி உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தில் தம்பதி நடராஜன்- தங்கம் மற்றும் அவர்களது மகன் ஸ்ரீராம் ஆகியோர் சிக்கினர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீ்ட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில், தம்பதி நடராஜன்- தங்கம் ஆகியோர் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. மேலும், பலத்த காயங்களுடன் ஸ்ரீராம் மீட்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com