தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மாஹேவில் இன்று முதல் வரும் 21-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு
Published on

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தில் வரும் 20-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகி மேற்கு - வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மாஹேவில் இன்று முதல் வரும் 21-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com