57-வது நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.அண்ணா நினைவிடத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
57-வது நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை
Published on

சென்னை:

பேரறிஞர் அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

அண்ணா நினைவிடத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்த வந்தபோது திரண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com