ரெயில் பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம் - கடற்கரை இடையே கூடுதலாக 20 விரைவு ரெயில்கள் இயக்கம்

கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
ரெயில் பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம் - கடற்கரை இடையே கூடுதலாக 20 விரைவு ரெயில்கள் இயக்கம்
Published on

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10, 11-ல் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் புறநகர் ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்தை குறைக்க தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்த விரைவு மின்சார ரெயில்கள் எழும்பூர், மாம்பலம், கிண்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com