சத்தீஷ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சத்தீஷ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
Published on

சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அங்கு தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மாநிலத்தில் ஏற்பட்ட தனித்தனி மோதல்களில் 83 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com