தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள 15 மாவட்டங்கள்...

புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் லேசான மழையும், மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள 15 மாவட்டங்கள்...
Published on

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் லேசான மழையும், மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், கடலூர், காஞ்சி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com