RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழப்பு - ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் இரங்கல்

ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழப்பு - ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் இரங்கல்
Published on

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. பலரும் இந்த கூட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பெங்களூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com