வார இறுதி நாட்களில் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கம்

கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்கப்படும்.பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
வார இறுதி நாட்களில் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சென்னை:

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்கப்படும்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பஸ்களும், சனிக்கிழமை 55 பஸ்களும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் சனிக்கிழமை 20 பஸ்களும் என மொத்தம் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (20-ந்தேதி) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com