கேரள முத்தப்பனிடம் அருள்வாக்கு கேட்ட புதுச்சேரி சபாநாயகர்

தமிழ் மக்களின் குலதெய்வ வழிபாடுபோல கேரள மக்கள் முத்தப்பன் திருவிழாவை நடத்தினர்.கேரள மக்கள் முத்தப்பனிடம் தங்களது கோரிக்கைகளை காதில் கூறி அருள்வாக்கு பெற்றனர்.
கேரள முத்தப்பனிடம் அருள்வாக்கு கேட்ட புதுச்சேரி சபாநாயகர்
Published on

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பரசின்னி கடவு முத்தப்பன் கோவில் உள்ளது.

இங்கு சிவனே முத்தப்பனாக உள்ளார். சிவனும் சக்தியும் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து, மாந்திரீக நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்கின்றனர்.

கண்ணூர் புதுச்சேரியின் மாகி பிராந்தியம் அருகில் உள்ளது. இதனால், மாகி மக்களும் முத்தப்பன் கோவிலுக்கு சென்று வழிபடுவர். உள்ளூர் பாரம்பரியத்தின்படி புதுச்சேரி வாழ் மலையாள மக்கள் கடந்த 7 ஆண்டு களாக முத்தப்பனுக்கு விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.

இந்த முறை 8-வது ஆண்டாக லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பூங்காவில் முத்தப்பன் விழா நடந்தது. தமிழ் மக்களின் குலதெய்வ வழிபாடுபோல கேரள மக்கள் முத்தப்பன் திருவிழாவை நடத்தினர்.

இறுதிநாளில் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து சிவன், சக்தி பள்ளிவேட்டை ஆடி குதித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி செண்டை மேளம் முழங்க நடைபெற்றது.

கேரள மக்கள் முத்தப்பனிடம் தங்களது கோரிக்கைகளை காதில் கூறி அருள்வாக்கு பெற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முத்தப்பனிடம் காதில் தனது வேண்டுதலை சொல்ல அதற்கு முத்தப்பன் அருள்வாக்கு கூறினார்.

தங்கள் வேண்டுதல் நிறைவேற விழாவில் பக்தர்கள் முத்தப்பனுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு, பச்சைப்பயறு, மீன், கருவாடு போன்றவற்றோடு நீண்ட கத்தி மற்றும் தென்னங்கள ஆகியவற்றை கொடுத்து வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com