புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை - முதலமைச்சர் ரங்கசாமியுடன் பா.ஜ.க.வினர் ஆலோசனை

முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.வருகிற 15-ந் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மறுநாள் 16-ந்தேதி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார்.
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை - முதலமைச்சர் ரங்கசாமியுடன் பா.ஜ.க.வினர் ஆலோசனை
Published on

புதுச்சேரி:

பிரதமர் மோடி வருகிற 16-ந்தேதி அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருவது உறுதியாகி உள்ளது. டெல்லியில் இருந்த வருகிற 15-ந் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மறுநாள் 16-ந்தேதி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார்.

பின்னர் விமான நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழா ஏற்பாடு தொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.

2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பிரதமரின் வருகையின்போது அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com