காரைக்கால் மீனவர்கள் கைது எதிரொலி- புதுச்சேரி முதலமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்

மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.மீனவர்களை சிறை பிடித்தபோது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
காரைக்கால் மீனவர்கள் கைது எதிரொலி- புதுச்சேரி முதலமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்
Published on

தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடிப்பதாக கூறி சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேதாரண்யம், ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.

மீனவர்களை சிறை பிடித்தபோது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com