பள்ளி சிறுமியை கடத்தி நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்- போக்சோவில் கைது

காதலன் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.காதலன் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பள்ளி சிறுமியை கடத்தி நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்- போக்சோவில் கைது
Published on

புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சிறுமி, பாகூர் பகுதியில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் பாகூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி வந்து காதலன் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் காதலன் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து போலீசார் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காதலன் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காதலன் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகின்றனர். மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 மாணவர்களும் பள்ளி படிப்பை இடையிலேயே கைவிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com