மணிப்பூர் முதல்வராகிறார் யும்னம் கெம்சந்த் சிங்

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.தற்போது சட்டமன்ற பாஜக தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் முதல்வராகிறார் யும்னம் கெம்சந்த் சிங்
Published on

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அமைக்க முயற்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மணிப்பூர் சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனால் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்ததும், யும்னம் கெம்சந்த் சிங் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தூண்டி விடுவதாக, முதல்வராக இருந்த பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

குகி தலைவர் நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com