சட்டையின்றி போராடிய விவகாரம் - இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது

அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் உதய் பானு சிப் கைது
சட்டையின்றி போராடிய விவகாரம் - இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது
Published on

டெல்லியில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை பாரத் மண்டபத்தில் வைத்து ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் உலக அரசியல் மற்றும் தொழில்நுட்ப தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

கடந்த 20 ஆம் தேதி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து தங்கள் மேலாடைகளை கழற்றி அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலுக்குள் புகுந்த நான்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், திடீரென தங்கள் சட்டைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை காட்டி கோஷமிட்டனர்.

பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த போராட்டத்தில் டுபட்ட இளைஞர் காங்கிரஸார் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார். அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் மனு அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com