என் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாள்- ஏர் இந்தியா தலைவர் உருக்கம்

இதுவரை 204 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளோம்.
என் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாள்- ஏர் இந்தியா தலைவர் உருக்கம்
Published on

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 204 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்," இந்த விபத்து எனது தொழில் ரீதியான வாழ்க்கையில் மிகவும் மோசமான நாளாக அமைந்துவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளோம். போயிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியிடம் பேசி இருக்கிறேன். சிறந்த நிபுணர்களை அனுப்பி வைக்கக் கேட்டுள்ளேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com