அகமதாபாத்: விமான விபத்தில் இருந்து போக்குவரத்து நெரிசலால் உயிர் தப்பிய பெண்

அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானோர் குடும்பங்களுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
அகமதாபாத்: விமான விபத்தில் இருந்து போக்குவரத்து நெரிசலால் உயிர் தப்பிய பெண்
Published on

அகமதாபாத்:

அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் விமானத்தில் பூமி சவுகான் என்ற பெண் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தார். இதற்காக அவர் வாகனத்தில் தனது வீட்டில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் நோக்கி புறப்பட்டார்.

ஆனால் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றார். இதனால் அவர் உயிர் தப்பினார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், விமான விபத்தை அறிந்தவுடன் உடல் நடுங்கியது. அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியவில்லை என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com