7 வயது மகன் முன்னிலையில் கணவரை கொன்றுவிட்டு மனைவி தற்கொலை

சம்பவத்தன்று காலையிலும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்பு சங்கீதா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
7 வயது மகன் முன்னிலையில் கணவரை கொன்றுவிட்டு மனைவி தற்கொலை
Published on

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பெண் ஒருவர் தனது 7 வயது மகன் முன்னிலையில் தனது கணவரை கொன்று, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏ பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் முகேஷ் பர்மருக்கும், அவரது மனைவியான சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்று காலையிலும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சங்கீதா, கணவரை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சங்கீதாவும் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு சங்கீதா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அக்கடிதத்தை கைப்பற்றிய போலீசார், திருமணம் மற்றும் நிதி பிரச்சனைகள் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை மற்றும் தற்கொலை நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com