ஹாஸ்பிடலில் ரீல்ஸ் பார்த்த டாக்டர்.. கவனக்குறைவால் மூதாட்டி மரணம் - அதிர்ச்சி வீடியோ

மருத்துவர் ஆதர்ஷ் சங்கர், நோயாளியை கவனிக்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்த்து கொண்டிருந்தார்.இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாஸ்பிடலில் ரீல்ஸ் பார்த்த டாக்டர்.. கவனக்குறைவால் மூதாட்டி மரணம் - அதிர்ச்சி வீடியோ
Published on

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்ட மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் சிகிச்சை அளிக்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்த்து கொண்டிருந்ததால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் மெயின்புரி மாவட்ட மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டதாக அனுமதிக்கப்பட்ட பிரவேஷ் குமாரி என்ற 60 வயது மூதாட்டி அடுத்த 15 நிமிடங்களில் உயிரிழந்தார்.

அப்போது பணியில் இருந்து மருத்துவர் ஆதர்ஷ் சங்கர், நோயாளியை கவனிக்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்த்து கொண்டிருந்ததாகவும் நோயாளியை கவனிக்க செவிலியரை அனுப்பியதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், நோயாளியின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவரது மகன் குரு ஷரன் சிங் கூச்சலிட்டு போராடியுள்ளனர். அப்போது மருத்துவர் ஆதர்ஷ் சங்கர், குரு ஷரன் சிங்கை அறைந்தால் மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மதன் லால், "இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும் மருத்துவர் சங்கர் கவனக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com