காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று உடலை பைக்கில் கொண்டு சென்ற மனைவி - சிசிடிவி வீடியோ

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார்.ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவி எரித்துள்ளனர்.
காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று உடலை பைக்கில் கொண்டு சென்ற மனைவி - சிசிடிவி வீடியோ
Published on

ராஜஸ்தானின் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று அவரது உடலை மனைவி பைக்கில் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஜெய்ப்பூரில் தனலால் என்பவர் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து கேள்வி எழுப்பித்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார். பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவியும் கள்ளகாதலனும் எரித்துள்ளனர்.

மார்ச் 16 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனையடுத்து தனலால் மனைவி கோபாலி தேவி மற்றும் அவரது காதலர் தீனதயாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com