"பிரதமர் மவுனம் ஏன்?"- ஈரான் போர்க்கப்பல் தாக்குதல் விவகாரத்தில் ராகுல் காந்தி கடும் கண்டனம்

இந்தியப் பெருங்கடலில் ஒரு ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.எல்.பி.ஜி. மற்றும் எல்.என்.ஜி. விநியோக நிலை இன்னும் மோசமாக உள்ளது.
"பிரதமர் மவுனம் ஏன்?"- ஈரான் போர்க்கப்பல் தாக்குதல் விவகாரத்தில் ராகுல் காந்தி கடும் கண்டனம்
Published on

இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஈரானின் புதிய போர்க் கப்பலில் ஒன்றான ஐரிஸ் டெனா போர்க் கப்பலை இலங்கை கடற்பரப்புக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது. இதில் 87 பேர் பலியானார்கள்.

இதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? என்று பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

உலகம் தற்போது மிகுந்த அசாதாரணமும், பதட்டமும் நிறைந்த காலக்கட்டத்தில் இருக்கிறது. கடுமையான சூழ்நிலைகள் நமது முன்பு காத்திருக்கின்றன.

இந்தியாவின் எண்ணெய் விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நமது எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்கின்றன.

எல்.பி.ஜி. மற்றும் எல்.என்.ஜி. விநியோக நிலை இன்னும் மோசமாக உள்ளது.

இந்த மோதல் நமது அருகிலேயே வந்துவிட்டது. இந்தியப் பெருங்கடலில் ஒரு ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பிரதமர் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை.

இதுபோன்ற ஒரு தருணத்தில் நமக்கு உறுதியான மற்றும் நிதானமான தலைமையே தேவை. அதற்கு பதிலாக நம்முடைய சுய தன்மையை விட்டுக் கொடுத்த ஒரு சமரச பிரதமரையே இந்தியா பெற்றுள்ளது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com