துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?.. இந்தியா கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவு

தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.ஆகஸ்ட் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகும்.
துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?.. இந்தியா கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவு
Published on

ஜெகதீப் தன்கர் உடனலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் யாரை வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்று மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக எம்.பி. கனிமொழி, சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழு அதிகாரம் வழங்கி முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

நாளை மறுநாள் ஆகஸ்ட் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்பதால், இன்று வேட்பாளரின் பெயரை வெளியிட இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இன்று மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com