மேற்கு வங்கம்: பயணிகள் ரெயிலில் தீ விபத்து

ஊழியர்கள் உடனடியாக அந்தப் பெட்டியை தனியே பிரித்தனர்.ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கட்வா - அசிம்கஞ்ச் பயணிகள் ரெயில் பெட்டி எரியும் காட்சி
 கட்வா - அசிம்கஞ்ச் பயணிகள் ரெயில் பெட்டி எரியும் காட்சி
Published on

மேற்கு வங்கத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கட்வா ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் தீவிபத்து ஏற்பட்டது.

அதிகாலை சுமார் 4.30 மணியளவில், கட்வா இரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்த கட்வா - அசிம்கஞ்ச் பயணிகள் ரெயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.

தீ பரவுவதைத் தடுக்க இரயில்வே ஊழியர்கள் உடனடியாக அந்தப் பெட்டியை ரெயிலின் மற்ற பெட்டிகளில் பிரித்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தின் போது ரெயில் பெட்டி காலியாக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com