மேற்குவங்கத்தில் பாஜக எம்.பி. மீது தாக்குதல் - மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு

பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார்.
மேற்குவங்கத்தில் பாஜக எம்.பி. மீது தாக்குதல் - மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு
Published on

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.

இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.

இந்த நிலையில் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது சிலர் கற்களை வீசினர். இதில் பாஜக எம்.பி. முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com