பாராளுமன்றத்தில் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம்- மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் அமளியால் கடந்த 2 வாரமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கியது.
பாராளுமன்றத்தில் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம்- மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
Published on

பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.

இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளி லும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 வாரமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கியது.

இந்நிலையில், 'எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம்' என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com