இந்தியா- தாய்லாந்து இடையிலான உறவு கலாச்சாரம், ஆன்மீகத்தோடு தொடர்புடையது: பிரதமர் மோடி

தாய்லாந்தின் கிராமப்புற வாழ்க்கையுடன் ராமாயணக் கதை ஆழமாக வேரூன்றி உள்ளதுஇந்தியா- தாய்லாந்து இடையே பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்தோம்.
இந்தியா- தாய்லாந்து இடையிலான உறவு கலாச்சாரம், ஆன்மீகத்தோடு தொடர்புடையது: பிரதமர் மோடி
Published on

இந்திய பிரதமர் மோடி தாய்லாந்து சென்றுள்ளார். தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். அதன்பின் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

* நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இந்திய மக்கள் சார்பாக நான் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்

* இந்தியா- தாய்லாந்து இடையிலான நூற்றாண்டு கால உறவு என்பது ஆழமான கலாச்சாரம், ஆன்மீகத்தோடு பிணைக்கப்பட்டது.

* தாய்லாந்தின் கிராமப்புற வாழ்க்கையுடன் ராமாயணக் கதை ஆழமாக வேரூன்றி உள்ளது

* இந்தியா- தாய்லாந்து இடையே பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்தோம்.

* விரிவாக்கம் அல்ல, வளர்ச்சி என்ற கொள்கையில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்

* இந்தியா- தாய்லாந்து உறவுகளை மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த முடிவு செய்துள்ளோம்

* இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான சுற்றுலா, கலாச்சாரம், கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை நாங்கள் வலியுறுத்தினோம்

* இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய செயல்' கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வையில் தாய்லாந்து சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது

* எனது வருகையின்போது 18ஆம் நூற்றாண்டின் 'ராமாயண' சுவரோவிய ஓவியங்களை அடிப்படையாகக் கொண்ட தபால் தலையை வெளியிட்டதற்காக தாய்லாந்து அரசுக்கு நன்றி.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com