பிரமாண்ட வரவேற்பு காத்திருக்கு..! வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி

தாரிக் ரஹ்மான் பதவி ஏற்பு விழாவில் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.தாரிக் ரஹ்மானிடம் பிரதமர் எழுதிய கடிதத்தை ஓம் பிர்லா வழங்கினார்.
பிரமாண்ட வரவேற்பு காத்திருக்கு..! வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
Published on

வங்கதேசம் பிரமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த பதவி ஏற்பு விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். பின்னர் தாரிக் ரஹ்மானை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி அவருக்கு எழுதிய கடிதத்தை ஓம் பிர்லா வழங்கினார்.

பிரதமர் மோடி, தாரிக் ரஹ்மானுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "இரண்டு நெருங்கிய அண்டை நாடுகளாக, இந்தியாவும் வங்கதேசமும் பகிரப்பட்ட வரலாறு, கலாச்சார உறவுகள் மற்றும் அமைதி மற்றும் செழிப்புக்கான நமது மக்களின் அபிலாஷைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஆழமான வேரூன்றிய நட்பைக் கொண்டுள்ளன" குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வளர்ச்சி முன்னுரிமைகளில் ஒருங்கிணைவு எதிர்கால ஒத்துழைப்பை வழி நடத்தும் என்றும், இணைப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி, எரிசக்தி, சுகாதாரம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் ஆகியவற்றில் உறவுகளை விரிவுபடுத்த நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். பிரமாண்ட வரவேற்று உங்களுக்காக காத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com