மத்திய கிழக்கில் போர்பதற்றம் - பிரதமர் மோடி தலைமையில் அவசரக் கூட்டம்!

இரவு 9.30க்கு டெல்லியில் தரையிரங்குகிறார்.பிரதமர் மோடி பிப்ரவரி 25-26 தேதிகளில் இஸ்ரேலில் இருந்தார்.
மத்திய கிழக்கில் போர்பதற்றம் - பிரதமர் மோடி தலைமையில் அவசரக் கூட்டம்!
Published on

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்து ஆலோசிக்க, பிரதமர் மோடி இன்று இரவு டெல்லி திரும்பியதும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இன்று இரவு 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கக்கூடும். மேலும், இந்த போர்பதற்றத்தால் அங்கு வாழும் மில்லியன்கணக்கான இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த CCS கூட்டம் இந்த அம்சங்களையும், வளர்ந்து வரும் இராணுவ சூழ்நிலையையும் முழுமையாக விவாதித்து, எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க இந்தியாவின் தயார்நிலையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com