மேற்கு வங்காளத்தில் வன்முறை- முக்கிய குற்றவாளி கைது

வன்முறை தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் வன்முறை- முக்கிய குற்றவாளி கைது
Published on

வக்பு சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஒரு கும்பல் அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியது. வன்முறைச் சம்பவங்களின்போது தந்தை, மகன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

வன்முறை கும்பல் வீட்டை கொள்ளையடித்த பின்னர் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது. வன்முறை தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

இந்த நிலையில் முர்ஷிதாபாத்தில் தந்தை- மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ளனர் எஜ்நஐ குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com