உத்தரகாண்ட் மேக வெடிப்பு: ராணுவ வீரர்கள் 10 பேர் மாயம் என தகவல்

கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரகாண்ட் மேக வெடிப்பு: ராணுவ வீரர்கள் 10 பேர் மாயம் என தகவல்
Published on

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள தாராலி பகுதியில் இன்று கனமழை பெய்தது. இதனால் கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி தாராலி கிராமத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வீடுகள், ஓட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கு பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் சுகி என்ற இடத்திலும் மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகளை அடித்துச்சென்றது. இதிலும் பலர் மாயமானார்கள்.

இந்நிலையில், உத்தரகாசியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஹர்சில் முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் 10 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியானது.

பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டள்ளனர் என ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com