யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 25ம் தேதி நடைபெற்றது.சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள்.
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது
Published on

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு இந்த ஆண்டு 979 பேரை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 25ம் தேதி நடைபெற்றது.

சென்னையில் 69 மையங்களில் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக பட்டதாரி வாலிபர்கள், டாக்டர் படிப்பை முடித்தவர்கள், என்ஜினீயர்கள் என பலர் தேர்வு மையங்களில் திரண்டனர்.

சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.

இந்நிலையில், யுபிஎஸ்சி-சிஎஸ்இ-ன் முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com