முஸ்லிம்களை விரும்பவில்லை என்றால் கொடியில் இருந்து பச்சை நிறத்தை அகற்றவும்: உத்தவ் தாக்கரே சாடல்

மசோதா மீதான மோசடி நிலைப்பாடு, சொத்துக்களை அபகரித்து அவர்களுடைய தொழில் அதிபர் நண்பர்களுக்கு கொடுக்கும் சதியை நாங்கள் எதிர்க்கிறோம்.பாஜக 3ஆவது முறையாக மத்தியில் வெற்றி பெற்று, இதுவரை சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்து-முஸ்லிம் பிரச்சனையை எழுப்புகிறது.
முஸ்லிம்களை விரும்பவில்லை என்றால் கொடியில் இருந்து பச்சை நிறத்தை அகற்றவும்: உத்தவ் தாக்கரே சாடல்
Published on

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை எதிர்க்கவில்லை எனக் கூறிய சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவின் சதியை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது "மசோதா மீதான பாஜக-வின் மோசடி நிலைப்பாடு, சொத்துக்களை அபகரித்து அவர்களுடைய தொழில் அதிபர் நண்பர்களுக்கு கொடுக்கும் சதியை நாங்கள் எதிர்க்கிறோம்.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முஸ்லிம்கள் மீது காட்டும் அக்கறை, முகமது அலி ஜின்னாவை அவமானப்படுத்தும். பாஜக 3ஆவது முறையாக மத்தியில் வெற்றி பெற்று, இதுவரை சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்து-முஸ்லிம் பிரச்சனையை எழுப்புகிறது.

முஸ்லிம்களை விரும்பவில்லை என்றால் பாஜக அதன் கொடியில் உள்ள பச்சை நிறத்தை அகற்ற வேண்டும். அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பால் ஏற்பட இருக்கும் ஆபத்து, அதனை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com