ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் 2 மடங்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி

ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரியான காரணமின்றி பயணிகள் பயணத்தை ரத்து செய்தாலும் இதே அபராத கட்டணம் விதிக்கப்படும்.
ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் 2 மடங்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி
Published on

ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வாடகை வாகன நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது

அதில், ஓலா, ஊபர் நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான உச்சவரம்பு 1.5 மடங்காக இருந்த நிலையில், தற்போது 2 மடங்காக மத்திய அரசு உயர்த்தியுள்ளது

மேலும், சரியான காரணமின்றி பயணம் ரத்து செய்யப்பட்டால், ஓட்டுநர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 10 சதவீத அபராதத்தை, அதிகபட்சமாக ரூ.100 ஆக நிர்ணயிக்க போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சரியான காரணமின்றி பயணிகள் பயணத்தை ரத்து செய்தாலும் இதே அபராத கட்டணம் விதிக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com