காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

குப்வாரா கெரான் சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த 7-ந் தேதி முதல் ஆபரேஷன் பிம்பிள் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குப்வாரா கெரான் சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பதிலுக்கு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இதன் மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com