ரம்ஜான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் - ரிசர்வ் வங்கி உத்தரவு

2024-25 நிதியாண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டியுள்ளதால் வங்கிகளுக்கு விடுமுறை இல்லைஅரசு விடுமுறை தினமான இன்று (மார்ச் 31) வங்கிகள் செயல்படுவது தொடர்பாக ஆர்.பி.ஐ. விளக்கம்
ரம்ஜான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் - ரிசர்வ் வங்கி உத்தரவு
Published on

இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்தியா, ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டைப் பின்பற்றுகிறது. எனவே 2024-25ம் நிதியாண்டின் கணக்குகளை அரசு மார்ச் 31ம் தேதியுடன் முடிக்க வேண்டும். இதற்காக மார்ச் 31 ஆம் தேதி வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் அறிக்கையில், அனைத்து வங்கிகள் மற்றும் அரசாங்க வருவாய் மற்றும் செலவுகளை நிர்வகிக்கும் கிளைகள் மார்ச் 31ஆம் தேதி வழக்கமான பணிநேரத்தில் பணியாற்ற வேண்டும்.

அரசு பரிவர்த்தனைகள் தொடர்பான கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும் என்று ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது. மார்ச் 31ம் தேதியிட்ட காசோலைகளையும் கிளியர் செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் மார்ச் 31, 2025க்குள் கணக்கிட்டுக் கொள்ள வசதியாக, மார்ச் 31 அன்று அரசு காசோலைகளுக்கு பிரத்தியேகமாக CTS இன் கீழ் சிறப்பு தீர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை அன்றைய தினம் செலுத்தலாம். இதர பொதுவான வங்கி சேவைகள் இன்று இயங்காது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com