ராகுல் காந்தி, காங்கிரசை அரசியலில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: பாஜக

பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.இதனால் பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா கூறியிருந்தார்.
ராகுல் காந்தி, காங்கிரசை அரசியலில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: பாஜக
Published on

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பதிலளிக்க இருந்தபோது, சில காங்கிரஸ் பெண் எம்.பி-க்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று ஒரு அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், இத்தகைய சூழலில் நாட்டின் ஜனநாயக மரபுகள் சிதைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று தாமே கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்த சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை மக்களவை செயலகத்தில் எதிர்க்கட்சிகள் வழங்கின.

இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை அரசியலில் இருந்து நீக்கும் நேரம் இது என பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் உணர்வுகளிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள்தான் இந்தியாவின் அனைத்து அரசியலமைப்பு பதவிகளையும் பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள். ராகுல் காந்தியையும் காங்கிரசையும் அரசியலில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com