வலுக்கட்டாயமாக மது கொடுத்து, சூடு வைத்து பெண்ணுக்கு மாந்திரீக பூஜை- கணவர் உள்பட 3 பேர் கைது

இளம்பெண்ணுக்கு சில மாந்திரீக பூஜைகள் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார்.இளம் பெண்ணின் உடலில் பல இடங்களில் தீயால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
வலுக்கட்டாயமாக மது கொடுத்து, சூடு வைத்து பெண்ணுக்கு மாந்திரீக பூஜை- கணவர் உள்பட 3 பேர் கைது
Published on

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூர் கொரட்டி குன்னல் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது55). இவரது மகன் அகில்(26). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுடன் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து அகில் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் அகிலின் மனைவிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் தீயசக்திகள் புகுந்துவிட்டதாக அகிலின் குடும்பத்தினர் கருதினர். ஆகவே அவர்கள் பத்தினம்திட்டா பெரும்துருத்தி மடச்சிரா பகுதியை சேர்ந்த சிவதாஸ் (54) என்ற மந்திரவாதியை நாடினர்.

அப்போது அவர் இளம்பெண்ணுக்கு சில மாந்திரீக பூஜைகள் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து மாந்திரீக பூஜை செய்வதற்கான எற்பாடுகளை அகிலின் குடும்பத்தினர் செய்தனர். பின்பு அவர்களது வீட்டுக்கு வந்த மந்திரவாதி சிவதாஸ் மாந்திரீக பூஜை செய்தார்.

இளம்பெண்ணை ஒரு இடத்தில் அமரவைத்து தொடர்ந்து 10 மணி நேரம் பூஜை செய்துள்ளார். அந்த பூஜையின் போது இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து குடிக்க செய்துள்ளனர். மேலும் பீடி சாம்பலை விழுங்கச் செய்திருக்கின்றனர்.

அது மட்டுமின்றி இளம் பெண்ணின் உடலில் பல இடங்களில் தீயால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இந்தநிலையில் இளம்பெண்ணை பார்க்க அவரது தந்தை வந்துள்ளார். அவரிடம் தன்னை கணவர் குடும்பத்தினர் மாந்திரீக பூஜை என்ற பெயரில் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கிய விவரத்தை தெரிவித்தார்.

அவர் அதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி இளம்பெண்ணின் கணவர் அகில், மாமனார் தாஸ், மந்திரவாதி சிவதாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் அகிலின் தாய்க்கும் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந் துள்ளது. தலைமறைவாகி விட்ட அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com