உண்மையான ஊடுருவல்காரர்கள் டெல்லியில் உள்ளனர் - ஓவைசி ஒரே போடு!

இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.பீகார் தேர்தலுக்கான 101 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது.
உண்மையான ஊடுருவல்காரர்கள் டெல்லியில் உள்ளனர் - ஓவைசி ஒரே போடு!
Published on

பீகாரில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் மகாபந்தன் (இந்தியா) கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து 32 இடங்களில் மட்டும் களம் காண்கிறது.

இந்நிலையில் பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த ஓவைசி, தேர்தல் பிரச்சாரத்தின் போது பீகாரில் இருந்து ஊடுருவல்காரர்களை ஒழிப்போம் என்று அமித் ஷா பலமுறை கூறி வருகிறார்.

இருப்பினும், மோடிக்கும் ஷாவுக்கும் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஊடுருவல்காரர்கள் டெல்லியில் உள்ளனர்.

வங்கதேச மக்களால் வெளியேற்றப்பட்ட ஒரு ஊடுருவல்காரரை மோடி வரவேற்று, அவரை சகோதரி என்று அழைத்து வருகிறார்" என்று ஷேக் ஹசீனாவை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய ஓவைசி,"அனைவரின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதாகக் கூறும் நரேந்திர மோடி, பீகார் தேர்தலில் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு சீட் கூட வழங்கவில்லை. பீகார் தேர்தலுக்கான 101 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இடம்பெறவில்லை" என்று குறிப்பிட்டார்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com