புதிய வருமான வரி மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!

புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.எதிர்க்கட்சிகள் அமளிக்கிடையில் 3 நிமிடத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதிய வருமான வரி மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!
Published on

புதிய வருமான வரி மசோதா2025 நேற்று மக்களவையில் நிறைவேறிய நிலையில் இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

வருமான வரிச் சட்டம், 1961-க்குப் பதிலாக இந்தப் புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.

முன்னதாக கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதாவின் பழைய பாதிப்பு கடந்த வாரம் திரும்பபெறப்பட்டது.

31 எம்.பி.க்கள் அடங்கிய தோ்வுக் குழு, மசோதா தொடா்பாக வழங்கிய பரிந்துரைகளை சேர்த்து மசோதாவின் புதிய பதிப்பு நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகள் அமளிக்கிடையில் 3 நிமிடத்தில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்ட்டது.

இந்த மசோதா சட்டமான பின்னர், ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com