விஜய்யைப் பார்த்து தி.மு.க. பயப்படுகிறது- நிர்மலா சீதாராமன்

ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகை, மற்றொருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலு ஆகியவை பயமுறுத்துகின்றன.இந்த பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது.
விஜய்யைப் பார்த்து தி.மு.க. பயப்படுகிறது- நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி:

டெல்லியில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் தனியார் செய்தி சேனல்களுக்கு பேட்டியும் அளித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் விஜய்யின் அரசியல் வருகையால் பயப்படுகிறீர்களா? என்றும் கேட்கப்பட்டு உள்ளது. இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், "விஜய்யைப் பார்த்து தி.மு.க.தான் பயப்பட வேண்டும். தி.மு.க. பயப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகை, மற்றொருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலு ஆகியவை பயமுறுத்துகின்றன. இந்த பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதை கலாசாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com