பைக்கை சேதப்படுத்தியதாக கூறி 32 மாணவர்களை மூங்கில் குச்சியால் அடித்த பள்ளி ஆசிரியர் கைது

மாணவர்களை அடித்த ஆசிரியர் அவர்களை மிரட்டி உள்ளார்.பள்ளியின் முதல்வர் அகமதுபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பைக்கை சேதப்படுத்தியதாக கூறி 32 மாணவர்களை மூங்கில் குச்சியால் அடித்த பள்ளி ஆசிரியர் கைது
Published on

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் தனது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாக சந்தேகித்து, 32 மாணவர்களை தாக்கிய பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 21-ந்தேதி ஆசிரியர் உஜ்வால் பிரகாஷ் சோனி என்பவர் தனது மோட்டார் சைக்கிளை மாணவர்கள் சேதப்படுத்தியதாக சந்தேகித்தார்.

அகமத்பூர் அருகே உள்ள 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தனியார் பள்ளி விடுதியில் உள்ள மாணவர்கள் ஆசிரியர் மூங்கில் குச்சியால் அடித்து, தாக்கி உள்ளார். மேலும் அவர், விரைவில் பள்ளி முதல்வராகிவிடுவேன். பின்னர் உங்களை பார்த்துக்கொள்கிறேன் என்று மிரட்டியும் உள்ளார். இந்த சம்பவத்தில் 32 மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிறிஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் அகமதுபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து பள்ளி ஆசிரியரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com