பஹல்காம் தாக்குதலில் படுகாயமடைந்த தமிழக மருத்துவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவியை தொடர்புக்கு கொண்டு பேசி ஆறுதல் தெரிவித்தார்.தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு வழங்கும் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.
பஹல்காம் தாக்குதலில் படுகாயமடைந்த தமிழக மருத்துவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை
Published on

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு எய்ம்ஸ் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர் பரமேஸ்வரனின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவியை தொடர்புக்கு கொண்டு பேசி ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் அவர், "தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு வழங்கும்" எனவும் உறுதி அளித்தார்.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் பரமேஸ்வரனுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர் பரமேஸ்வரன் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com