தஹாவூர் ராணா பீகார் தேர்தலின்போது தூக்கிலிடப்படுவார்.. பாஜக அரசியல் ஆதாயம் - சஞ்சய் ராவத்

18 நாட்கள் என்ஐஏ காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.ராணாவை நாடு கடத்துவது 16 வருடப் போராட்டம். அது காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கியது.
தஹாவூர் ராணா பீகார் தேர்தலின்போது தூக்கிலிடப்படுவார்.. பாஜக அரசியல் ஆதாயம் - சஞ்சய் ராவத்
Published on

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் உசேன் ராணா இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, ராணாவை மோடி அரசு தூக்கிலிடும் என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

முன்னதாக ராணா வியாழக்கிழமை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அவரை கைது செய்தது. மேலும் 18 நாட்கள் என்ஐஏ காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜக இதை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார். அவர் கூறியத்தவது, "ராணாவை உடனடியாக தூக்கிலிட வேண்டும், ஆனால் அவர் பீகார் தேர்தலின் போது தூக்கிலிடப்படுவார். ராணாவை நாடு கடத்துவது 16 வருடப் போராட்டம். அது காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கியது. எனவே ராணாவை மீண்டும் கொண்டு வந்ததற்கான பெருமையை யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று கூறினார்.

பீகாரில் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணி, காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. பாஜக-ஜேடியு கூட்டணி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவியைக் கோரும் வகையில், பாஜக தனது வாக்கு எண்ணிக்கையை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சஞ்சய் ராவத்தின் கருத்துக்கள் வந்துள்ளன.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com