உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் சூர்யகாந்த்!

பி.ஆர்.கவாயின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. சூர்யகாந்துக்கு ஜனாதிபதி திர​வுபதி முர்மு பதவிப்பிர​மாண​ம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் சூர்யகாந்த்!
Published on

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர்.கவாயின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று .

ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் புதிய தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த விழாவில்பிரேசில், பூடான், கென்யா, மலேசியா, நேபாளம், இலங்கை, மொரிஷியஸ் நாடுகளை சேர்ந்த தலைமை நீதிபதிகள் பங்கேற்றனர்.

முன்னதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்பது குறித்து பேசிய சூர்யகாந்த், "எனது பதவிக் காலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கி உள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com