சட்டவிரோத பாகிஸ்தான் - வங்கதேச குடியேறிகளை கண்டறிய மணிப்பூரில் மாநிலம் தழுவிய சோதனை வேட்டை

இயக்கத்தை நடத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சந்தேகம் உள்ள பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
சட்டவிரோத பாகிஸ்தான் - வங்கதேச குடியேறிகளை கண்டறிய மணிப்பூரில் மாநிலம் தழுவிய சோதனை வேட்டை
Published on

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது.

இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தங்கியுள்ள சட்டவிரோத வங்கதேச நாட்டினரைக் கண்டறிய மணிப்பூர் காவல்துறை மாநிலம் தழுவிய ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோத வங்கதேச மற்றும் பாகிஸ்தானிய நாட்டினர் ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளதைக் கண்டறிய, சரிபார்ப்பு இயக்கத்தை நடத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்பால் பள்ளத்தாக்கின் லிலாங், மினுதோங், குவாக்டா, மாயாங் இம்பால், சோரா, கைராங் போன்ற பகுதிகளிலும், உரிய விசாக்கள் அல்லது அரசின் நுழைவு அனுமதிச் சீட்டு (ILP) இல்லாமல் சட்டவிரோத வங்கதேச, பாகிஸ்தானிய நாட்டினர் தங்கியிருப்பதாகச் சந்தேகம் உள்ள பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

அங்கீகரிக்கப்படாமல் வங்கதேச, பாகிஸ்தானிய நாட்டினர் இருப்பதைச் சரிபார்க்கவும், ஏதேனும் சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டால் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் உயர் போலீஸ் அதிகாரிகளால் உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com