பாராளுமன்றம் செயல்பட ஒரு நாளைக்கு இத்தனை கோடி செலவா? #Parliament

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க பட்டியலிடப்பட்டு உள்ளது. இது மக்களின் பணம். மக்களின் பணத்தை வீணாக்கக்கூடாது.
பாராளுமன்றம் செயல்பட ஒரு நாளைக்கு இத்தனை கோடி செலவா? #Parliament
Published on

பாராளுமன்ற மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மேற்கு ஆசிய போர்ச்சூழல் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த மூத்த உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாடம் எடுப்பதுபோல பேசினார். அவர் பேசியதாவது:-

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க பட்டியலிடப்பட்டு உள்ளது. விவாதிக்க அவை தயாராக இருக்கிறது. நீங்கள் விவாதிக்க விரும்பவில்லையா?. அதை விட்டுவிட்டு, வேறு விஷயத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். நான் அவையை நடத்த விரும்புகிறேன். நீங்கள் நடத்த விரும்பவில்லை. அவையை நடத்துவதற்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.2½ லட்சம் செலவாகிறது. ஒரு மணி நேரத்துக்கு ரூ.1½ கோடி செலவு செய்யப்படுகிறது.

ஒரு நாளைக்கு ரூ.9 கோடி செலவு ஆகிறது. இது மக்களின் பணம். மக்களின் பணத்தை வீணாக்கக்கூடாது. எனவே, புரிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com