"இந்துக்களால் கொல்லப்பட வேண்டும்.." இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை மறுத்த மருத்துவர்

நான் எந்த முஸ்லிம் நோயாளிகளையும் பார்க்கப் போவதில்லை"துயரத்திலும் பயத்திலும் இருக்கிறாள். தனக்காக மட்டுமல்ல, அவளுக்குள் வளரும் உயிருக்காகவும்.
"இந்துக்களால் கொல்லப்பட வேண்டும்.." இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை மறுத்த மருத்துவர்
Published on

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கடந்த ஏப்ரல் 22 அன்று பயகரவாத்திகளால் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு அவர்களின் மத அடையாளங்களை பயங்கரவாதிகள் கேட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பின் வட இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், இஸ்லாமியர் என்பதால் 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கஸ்தூரி தாஸ் நினைவு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரான டாக்டர் சி.கே. சர்க்கார், "உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் என் மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்கிறார்கள், நீங்கள் கொலைகாரர்கள்.

உங்கள் கணவர் இந்துக்களால் கொல்லப்பட வேண்டும், அப்போதுதான் இந்துக்கள் அனுபவித்த வலியை நீங்கள் உணர முடியும். முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக மாறக் கற்பிக்கப்படும் மதரஸாக்கள் மற்றும் மசூதிகளுக்கு மட்டுமே நீங்கள் சிகிச்சைக்காகச் செல்ல வேண்டும்.திரும்பி வராதே, நீங்களெல்லாம் ஒரே மாதிரிதான்" என்று கூறி, அவர் 7 மாதமாக சிகிச்சை அளித்து வந்த முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

"இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம், மனம் உடைந்துள்ளோம். கடந்த ஏழு மாதங்களாக டாக்டர் சர்க்காரின் பராமரிப்பில் இருக்கும் எனது கர்ப்பிணி மைத்துனிக்கு நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமே அவருக்கு சிகிச்சையளிக்க அவர் வெளிப்படையாக மறுத்ததைக் கண்டு திகைப்பு ஏற்பட்டது.

அப்போதிருந்து அவள் அழுது கொண்டிருக்கிறாள். துயரத்திலும் பயத்திலும் இருக்கிறாள். தனக்காக மட்டுமல்ல, அவளுக்குள் வளரும் உயிருக்காகவும்.

அவளுக்கு ஆதரவு, இரக்கம் மற்றும் கவனிப்பு தேவைப்படும் நேரத்தில், அவள் வெளிப்படையான தப்பெண்ணத்தையும் கொடுமையையும் சந்தித்தாள்" என்று அந்தப் பெண்ணின் உறவினரான வழக்கறிஞர் மெஹ்ஃபுசா கதுன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர் மோனா அம்பேகோன்கர், "அவர் (மருத்துவர்) ஒரு ஆபத்தான குற்றவாளி. மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com