இதுதான் ஜனநாயகம்: டிரம்ப்-மம்தானி சந்திப்பை பாராட்டிய சசிதரூர்

நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி.வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை முதல் முறையாக மம்தானி சந்தித்துப் பேசினார்.
இதுதான் ஜனநாயகம்: டிரம்ப்-மம்தானி சந்திப்பை பாராட்டிய சசிதரூர்
Published on

புதுடெல்லி:

நியூயார்க் நகர மேயராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை முதல் முறையாக நேற்று சந்தித்துப் பேசினார்.

அரசியல் அரங்கில் எதிரும் புதிருமாக இருக்கும் டிரம்ப், மம்தானி சந்திப்பு அந்நாட்டு அரசியலில் அனைவராலும் உற்று பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த இருவரது சந்திப்பை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசிதரூர் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக, சசிதரூர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகம் என்பது இப்படித்தான் செயல்பட வேண்டும். தேர்தலின் போது எந்த வார்த்தை ஜாலங்களும் இல்லாமல் உங்கள் கருத்தை முன்வைத்து போராடுங்கள். தேர்தல் முடிந்த பின், நாட்டின் பொதுவான நலன்களை நிறைவேற்ற, மக்களிடம் அளித்த வாக்குறுதிகளின்படி ஒத்துழைப்புடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இதுபோன்ற சந்திப்புகளை இந்தியாவில் அதிகம் பார்க்க விரும்புகிறேன். என் அளவிலான பங்களிப்பையும் செய்ய முயற்சித்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக, பாஜ தலைவர்களை அதிகம் புகழ்ந்தும்,. காங்கிரசை விமர்சித்தும் சசிதரூர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com